சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்றும் கல்விக் கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Coimbatore:

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையின மக்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு குறைந்த வட்டி கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி தனிநபர் கடன், சுயஉதவிக்குழு கடன், விராசாத் கைவினை கலைஞர் கடன் மற்றும் கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. திட்டம்-1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். திட்டம்-2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை இருக்கலாம்.

திட்டம்-1-ன் கீழ் தனிநபர் கடனாக அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை ஆண்டுக்கு 6 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. திட்டம்-2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதமும், பெண்களுக்கு 6 சதவீதமும் வட்டியில் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞர்களுக்கான விராசாத் திட்டத்தின் கீழ் ஆண்களுக்கு 5 சதவீதமும், பெண்களுக்கு 4 சதவீதமும் வட்டியில் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

மூலப்பொருட்கள், கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் பயன்படுத்தப்படலாம்.

சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு திட்டம்-1-ன் கீழ் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை ஆண்டுக்கு 7 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம்-2-ன் கீழ் ஆண்களுக்கு 10 சதவீதமும், பெண்களுக்கு 8 சதவீதமும் வட்டியில் நபர் ஒருவருக்கு ரூ.1.5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

சிறுபான்மையின மாணவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்வதற்காக கல்விக் கடனும் வழங்கப்படுகிறது. திட்டம்-1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரை 3 சதவீத வட்டியிலும், திட்டம்-2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதமும், மாணவியர்களுக்கு 5 சதவீதமும் வட்டியில் ரூ.30 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

தனிநபர் கடன், சுயஉதவிக்குழு கடன் மற்றும் கைவினை கலைஞர் கடன்களுக்கு சிறுபான்மையினர் மதச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் தேவையான பிற ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

கல்விக் கடனுக்கு மதச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டண ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...