பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களிடம் கலந்துரையாடி பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார்.

Coimbatore:

பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, காவல்துறை மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் பேரூர் டி.எஸ்.பி தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கால்நடை ரோந்துப் பணியில் ஈடுபட்டார்.



கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்படி, காவலர்கள் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடந்து சென்று ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பேரூர் டி.எஸ்.பி குளத்துப்பாளையம் முதல் குபேரபுரி வரை நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.



ரோந்துப் பணியின் போது பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல சாலையோரத்தில் நின்றிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடிய அவர், பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகளை வழங்கினார்.



தொடர்ந்து சந்தைப்பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து காவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமராக்கள் அமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் குபேரபுரி பகுதியில் வசித்து வரும் வடமாநில தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு சென்று, அவர்கள் பணிபுரியும் இடங்கள், தங்கும் வசதிகள், அடையாள ஆவணங்கள் மற்றும் அனுமதி விவரங்கள் குறித்து சோதனை நடத்தினார்.

காவல்துறையினரின் இந்த கால்நடை ரோந்துப் பணி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...