உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன்னுசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.


கோவை: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள வணிக வரித்துறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) பொன்னுசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



அப்போது, புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், சமூக சீர்கேடுகள் மற்றும் அனைத்து வகையான புகையிலைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் விரிவாக விளக்கினார்.



நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனை படைத்த விளையாட்டு மற்றும் தடகள வீரர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும், புகையிலை ஒழிப்பு குறித்த கையெழுத்து விழிப்புணர்வு இயக்கமும் நடத்தப்பட்டது.

புகையிலை இல்லா சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

சமூக நலன், பொது சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...