கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

கோவை விமான  நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஹாங்காங் செல்லும் சில்க் ஏர்வேஸ் விமானத்தில் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 



இந்த தகவலின் பேரில், விமான நிலைய அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது, டெல்லியை சேர்ந்த ராகுல் மாலிக் மற்றும் ராகேஷ் குமார் என்ற இருவரிடம் 1.35 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 25 ஆயிரம் யூரோக்கள் இருப்பது தெரியவந்தது.

முறைகேடாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக கூறி அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை கடத்தி வந்த இருவரை கைது செய்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளின் இந்திய மதிப்பு சுமார் 1.04  கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...