3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படாததால், அதை உடனடியாக நடைமுறைப்படுத்த ‘டாக்ட்’ தொழில் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Coimbatore:

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்கம் (TACT) சார்பில் நடைபெற்ற கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின்இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கும் மின்வாரியத்திற்கும் வலியுறுத்தப்பட்டது.



இடையர்பாளையத்தில் உள்ள சங்க கட்டிடத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் பிரதாப் சேகர் மற்றும் பொருளாளர் லீலா கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், புதிதாக பொறுப்பேற்ற முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், கோவை மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.



மேலும், 12 கிலோவாட்டிற்குள் செயல்படும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த LT-3B மின்இணைப்புகளை LT-3A-1 பிரிவிற்கு மாற்ற தமிழக அரசு கடந்த 2023ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும் மின்வாரியம் இதனை நடைமுறைப்படுத்தவில்லை என்றும், இதனால் குறுந்தொழில் முனைவோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். உடனடியாக மின்இணைப்பு மாற்ற நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், சீரநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் சீராக இல்லாததால் ஆயிரக்கணக்கான தொழில்முனைவோர் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இயந்திரங்களுக்கான முதலீட்டு மானியம் பெற பல ஆண்டுகளாக காத்திருக்கும் தொழில்முனைவோரின் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து மானியங்களை வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...