சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார், ESI மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.


Coimbatore: கோவை சூலூர் பகுதியில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோவை ESI மருத்துவமனையில் சிறுமியின் குடும்பத்தினரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.




பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சிறுமி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் உடனடியாக ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார். புகார் அளிக்கப்படுவதற்கு முன்பே சம்பவம் நடைபெற்றிருப்பது துரதிருஷ்டவசமானது என்றும் அவர் கூறினார்.






இந்த வழக்கில் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை துரிதமாக கைது செய்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வழக்கின் விசாரணை வேகமாக முன்னெடுக்கப்படும் என்றும், உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.




குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர அரசு உறுதியாக செயல்படும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும், முதல்வர் விரைவில் நிதியுதவி அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.




சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின்படி, சிறுமி காணாமல் போன ஒரு மணி நேரத்திற்குள் இந்த கொடூரம் நடைபெற்றுள்ளதாகவும், இரவு 8 மணி முதல் 9 மணி நேரத்தில்தான் புகார் அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். தற்போது இரண்டு பேரே குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அரசு எந்தவித சமரசமும் செய்யாது என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.




குற்றம் நடைபெற்ற பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதிக குற்றச்செயல்கள் நடைபெறும் பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.




மேலும், தமிழகமெங்கும் சிங்கப்பெண்கள் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், வரும் 27ஆம் தேதி திட்டம் அமலுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். இந்த திட்டத்தின் மூலம் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அதிகரிக்கப்படும் என்றும், RTO மற்றும் காவல்துறை இணைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...