கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வாலிபர்களை மீது வழக்குப்பதிவு செய்த சாய்பாபா   காலனி போலீசார்  அவர்களை கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (34). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக டிரைவராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று, மருதமலையில் இருந்து ஆவாரம்பாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்தை ரவிக்குமார் ஓட்டி வந்தார். அப்போது மேட்டுப்பாளையம் சாலையில் அவிநாசிலிங்கம் கல்லூரி அருகே பேருந்து சென்றுகொண்டிருந்த போது, சிலர் பேருந்தை அடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பேருந்தை நிறுத்திய டிரைவர் ரவிக்குமார், சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர்கள் அவரை ஆபாசமாக திட்டியதுடன், கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

பயணிகள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இதுகுறித்து ரவிக்குமார் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தீபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், விருதுநகர் மாவட்டம் நல்லம்மா நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் (23) மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மணிகண்டன் (21) ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் தற்போது கவுண்டம்பாளையம் தக்கல் மார்க்கெட் அருகே தங்கி இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...