அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சேவைகள், மருத்துவ வசதிகளின் தரம் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.


சென்னை: சென்னையில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாநில அளவிலான இணை இயக்குநர் சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் தேனாம்பேட்டை அலுவலக வளாகத்தில் உள்ள தேசிய சுகாதாரக் குழும கலந்தாய்வுக் கூடத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சேவைகள், மருத்துவ வசதிகளின் தரம் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றும், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களை உரிய மரியாதையுடன் அணுகி தேவையான சிகிச்சைகள் மற்றும் சேவைகள் உடனுக்குடன் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுறுத்தினார்.

மேலும், அரசு மருத்துவமனைகளின் தூய்மை மற்றும் தரத்தை மதிப்பீடு செய்ய வழங்கப்படும் “காயகல்ப்” தரச் சான்றிதழுக்கான ஆய்வுகளை ஆண்டிற்கு ஒருமுறை நடத்துவதற்கு பதிலாக, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காலாண்டு அடிப்படையில் நடத்தி சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதேபோல், தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் CEA உரிமச் சான்றிதழ்களில் நிலுவையில் உள்ள சுமார் 8000 விண்ணப்பங்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும், ஆன்லைன் மூலம் தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்களை பதிவேற்றம் செய்தவுடன் தற்காலிக சான்றிதழ்களை உடனடியாக வழங்கி, பின்னர் முழுமையான ஆய்வுக்குப் பிறகு நிரந்தர சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

Newsletter

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...