நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி கொலை செய்ததாக ஒருவர் போலீசில் சரணடைந்துள்ளார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Coimbatore: கோவை நீலாம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அச்சங்குளம் அருகே ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த 18ஆம் தேதி காலை சுமார் 8 மணியளவில், முந்தைய இரவு அச்சங்குளம் பகுதியில் மீன்பிடிக்க சென்றிருந்த தம்பதியினர் தங்களது வலைகளை எடுக்க மீண்டும் அங்கு சென்றுள்ளனர். அப்போது, கப்பினி தோட்டம் அருகே உள்ள இட்டேரி வருவாய் நிலப்பகுதியில் ஆடையின்றி முகம், தலை மற்றும் கால்களில் ரத்தக் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் நீலாம்பூர் கிராம உதவியாளர் பாலமுரளிக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் துர்கா அளித்த புகாரின் பேரில், நீலாம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில், சம்பவம் நடைபெற்ற 17ஆம் தேதி இரவு சுமார் 8.45 மணியளவில், சம்பவ இடம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த சிலர், இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் தங்களுக்குள் தகராறு செய்து சத்தமாக பேசிக்கொண்டிருந்ததை பார்த்ததாக தெரிவித்துள்ளனர். அவர்கள் டார்ச் லைட் அடித்து விசாரித்தபோது, குடும்ப பிரச்சினை குறித்து பேசிக் கொண்டிருப்பதாக கூறியதால் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், கோகுல் (25) என்பவர் நேற்று மாலை நீலாம்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தானும், மற்றொரு நபரான ஹரிஷும், உயிரிழந்த சரவணனும் AG புதூரில் உள்ள லைஃப் கண்டெய்னர் சிலிண்டர் நிறுவனத்தில் கூலித்தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்ததாக தெரியவந்தது.

மூவரும் சம்பவ இடத்திற்கு மது அருந்தச் சென்றபோது ஏற்பட்ட தகராறில், சரவணனை கற்களால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த வரதராஜன் மகன் சரவணன் (41) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் ESI மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சரணடைந்த கோகுலை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஹரிஷை தேடி வருகின்றனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...