கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடிநீர், சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 63 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையிலும், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., முன்னிலையிலும் இன்று (19.05.2026) நடைபெற்றது.



இக்கூட்டத்தில், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மேயர் ரங்கநாயகிமற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் 63 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள்,சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.



கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய ஐந்து மண்டலங்களிலும் மற்றும் மாநகராட்சி பிரதான அலுவலகத்திலும் மொத்தமாக 63 மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், அவற்றின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.



இக்கூட்டத்தில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள், மாநகர தலைமைப் பொறியாளர், நகர்நல அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...