கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.




கோவை : கிணத்துக்கடவு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 22 வயது கூலித்தொழிலாளி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த காதல் தொடர்புக்கு சிறுமியின் அண்ணன் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிறுமியின் அண்ணன், மறைத்து வைத்திருந்த கத்தியால் கூலித்தொழிலாளியை குத்திக்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து இளஞ்சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கு கோவையில் உள்ள இளஞ்சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வெளியில் வந்திருந்த சிறுவன் இடையில் தலைமறைவானார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, இளஞ்சிறார் நீதிமன்றம் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...