கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கம் (OSMA) சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


Coimbatore: ஜவுளித் தொழில் சார்ந்த தொழில் முனைவோருடன் மத்திய ஜவுளித்துறை ஆணையர் விருந்தா மனோகர் தேசாய் கலந்துரையாடிய நிகழ்ச்சி வியாழக்கிழமை கோவையில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு ஓபன் எண்ட் மில்கள் சங்கத்தின் (OSMA) நிர்வாகிகள், மத்திய ஜவுளித்துறை கமிஷனரிடம் கோரிக்கை மனு அளித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து வலியுறுத்தினர்.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் அருள்மொழி கூறுகையில், “கழிவுப்பஞ்சு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஓபன் எண்ட் மில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, கழிவுப்பஞ்சு ஏற்றுமதிக்கு வரி விதித்து அதன் ஏற்றுமதியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்,” என்றார்.

மேலும், “ஓபன் எண்ட் (OE) நூல்களுக்கு தனி ‘HSN Code’ வழங்க வேண்டும் என்பதையும் மத்திய ஜவுளித்துறை கமிஷனரிடம் வலியுறுத்தியுள்ளோம்,” என்றும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் சங்க நிர்வாகிகள் முருகேசன், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...