கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கைதிகள் உட்பட 4 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை:

கோவை மத்திய சிறையில் மகேஷ் @ மகேந்திரன் (26), சுராளி @ சுரேந்திரன் (22), கலாநிதி @ அபிவிஷ்ணு (27) ஆகியோர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்திப்பதற்காக சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து அனுமதி பெற்றிருந்தார்.

அதன்படி, கடந்த 12ஆம் தேதி கோவை மத்திய சிறைக்கு வந்த நவீன், கைதிகளுக்கு வழங்குவதற்காக வர்க்கி உள்ளிட்ட தின்பண்டங்களை கொண்டு வந்துள்ளார். அவற்றை மகேஷ் @ மகேந்திரனிடம் வழங்குமாறு கூறி சிறைக் காவலர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.

சிறை விதிமுறைகளின்படி, கைதிகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது வர்க்கி பாக்கெட்டுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6.24 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து கோவை மத்திய சிறை ஜெயிலர் திருமலை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், NDPS சட்டம் மற்றும் சிறைச்சாலை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கஞ்சா கடத்த முயன்ற நவீன் மற்றும் அதை பெற முயன்ற கைதிகள் மகேஷ் @ மகேந்திரன், சுராளி @ சுரேந்திரன், கலாநிதி @ அபிவிஷ்ணு ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி முதுநிலை மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது

Coimbatore மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை மாணவிகளுக்கான ஒருங்கிணைப்பு விழா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 29.99...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு தென்மேற்கு பருவமழையால் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள...

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...