நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Coimbatore: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துபோராடி வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தொழிலாளர்களின் மீதான அடக்குமுறையை கண்டிப்பதாக, கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சார்பில் கண்டன வாயிற்கூட்டம் நடைபெற்றது.



கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பிஜிஎம் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.



நொய்டா தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நடைபெறும் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்றும், குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26,000 வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், காண்ட்ராக்ட் மற்றும் பயிற்சி என்ற பெயரில் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதை நிறுத்த வேண்டும், அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த முறைக்கு பதிலாக நிரந்தர பணியை உறுதி செய்ய வேண்டும், எட்டு மணி நேர வேலை சட்டப்பூர்வமாக அமல்படுத்த வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், தொழிலாளர் நலனுக்கு எதிரான புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ. குடியரசு தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில தலைவர் எஸ். மகேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பாபு ஏ. ராதாகிருஷ்ணன், பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகி வி. வெங்கட்ராமன் மற்றும் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ஒய். அப்துல் முத்தலிப் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை SRIT-ல் EBDC 6.0 மின்சார இருசக்கர வாகன வடிவமைப்பு சவால் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் (SRIT) செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு EBDC 6.0 மின்சார இருசக்க...

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: கோவையில் அமைச்சர் சம்பத் குமார் தொடங்கி வைத்தார்

கோவை இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் தி...

கோவை கணபதி பள்ளியில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 20-க்குட்பட்ட கணபதி, இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேயர் ரங...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் மதுக்கரை போக்குவரத்து நெரிசல்: அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவை மதுக்கரை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் கல்லூரிப் பேருந்துகள், கார்கள், வணிக வாகனங்கள் உள்...

பண்டிகை காலம்: சென்னை-கொல்லம் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அக்டோபர் முதல் நவம்பர் 2026 வரை சென்னை-கொல்லம் இடைய...

EPFO கட்டாய உறுப்பினர் ஊதிய வரம்பு ₹25,000 ஆக உயர்வு

EPFO-வில் கட்டாய உறுப்பினர் சேர்க்கைக்கான மாத ஊதிய உச்சவரம்பு ₹15,000-ல் இருந்து ₹25,000 ஆக செப்டம்பர் 17 முதல் உயர்த்தப...