முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்களைத் தொடர்ந்து தமிழக அரசு ஒரு நாளிலேயே ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


சென்னை:பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து, முதலமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரியாக (OSD) நியமிக்கப்பட்டிருந்த அவரது ஜோதிடர் ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் நியமனத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, மே 12, 2026 அன்று வெளியிடப்பட்ட ஆணை எண் 675 மூலம் வழங்கப்பட்ட நியமனம், தற்போது மே 13, 2026 தேதியிட்ட ஆணை எண் 684 மூலம் திரும்ப பெறப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“Officer on Special Duty to Chief Minister” பதவிக்கான நியமனம் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ரத்து நடவடிக்கை முதலமைச்சர் அலுவலகத்தின் குறிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவில் தமிழக அரசின் முதன்மை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர் கையெழுத்திட்டுள்ளார்.

நியமனம் வெளியான சில மணி நேரங்களிலேயே அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஒரே நாளில் அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டிருப்பது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், நியமனம் ஏன் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...