திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: திருப்பூர்: திருப்பூர் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ், இன்று இந்திரா நகர் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது அங்கிருந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் கைகலப்பாக மாறியதாகவும், பின்னர் மேலும் சிலர் அந்த கும்பலில் இணைந்து ஜெகதீஷை சரமாரியாக தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் ஜெகதீஷுக்கு உதவ முன்வந்ததை தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட இருவரை பொதுமக்கள் பிடித்து 15 வேலம்பாளையம் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் இருவரை பிடித்து, மொத்தம் நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த ஜெகதீஷ் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டப்பகலில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...