“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் வீட்டு உரிமையாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் செட்டிபாளையம் ஸ்டார் சுப்ரீம் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் காலி மனையில் தொடர்ந்து மர்ம நபர்களால் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குப்பைகளை எரிப்பதால் உருவாகும் கடுமையான நச்சுப் புகை இரவு நேரங்களில் முழுப் பகுதியையும் சூழ்ந்து கொள்வதாகவும், இதனால் பொதுமக்கள் மூச்சு விட முடியாமல் அவதிப்படுவதாகவும் குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஸ்டார் சுப்ரீம் வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் அவசர புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், “தனியார் காலி மனையை சிலர் குப்பை கொட்டும் இ

க பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இப்பகுதியில் நடைபெறும் இந்தச் சம்பவங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, குப்பை கொட்டி தீ வைப்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...