தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனது வாழ்த்துக்கள் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிக்கு வந்திருந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

“நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் மக்கள் சக்தியை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. பணம் கொடுத்து வாக்குகளை வாங்கலாம் என்ற எண்ணம் முறியடிக்கப்பட்டுள்ளது. கள்ள ஓட்டும் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

மேலும், வாக்காளர் சரிபார்ப்பு நடவடிக்கையான SIIR பணியின் காரணமாக வாக்கு சதவீதம் அதிகரித்ததாகவும், அதற்கு தேர்தல் ஆணையம், மத்திய அரசு மற்றும் நீதித்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

திமுக ஆட்சியின் கடந்த ஐந்தாண்டு கால செயல்பாடுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், போதைப் பொருள் பரவல், பெண்கள் மற்றும் பட்டியல் சமூகங்களுக்கு எதிரான செயல்கள், கோவில் இடிப்புகள் உள்ளிட்டவை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், அதுவே தேர்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்ததாகவும் கூறினார்.

மேலும், பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்திற்கும் அதன் தலைவர் விஜய்க்கும் இந்து முன்னணி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்த அவர், “விஜய் தலைமையிலான அரசு மக்கள் நலன் சார்ந்த ஆட்சியாக அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம்,” என்றார்.

அதேபோல், பிற மாநிலங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க.விற்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் அரசியல் சாசனத்தின்படி நல்லாட்சியை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


Newsletter

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...