திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியின் கம்மல் தொலைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Coimbatore: திருப்பூர்: நாடு முழுவதும் இன்று நீட் (NEET) தேர்வு நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிக்கன்னா அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட 7 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.



கடந்த 26ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட்டுகள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 3,608 மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.

கடந்த ஆண்டில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற தேர்வு, இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மட்டும் நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம், மருத்துவக் குழு, ஆம்புலன்ஸ் வசதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வு நாளான இன்று காலை 10 மணி முதலே மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் மையங்களுக்கு வரத் தொடங்கினர். வழக்கம்போல் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே தேர்வாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 11 மணி முதல் மதியம் 1:30 மணி வரை தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

தேர்வு மையத்திற்குள் சென்ற பிறகு, பெற்றோர்கள் வெளியே செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். மேலும், மாலை 5:30 மணிக்கு தேர்வு முடிந்த பின் வந்து மாணவர்களை அழைத்துச் செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருப்பூர் ஜெய்வாபாய் தேர்வு மையத்திற்கு வந்த திருப்புரை சேர்ந்த தன்ஷிகா என்ற மாணவி, சோதனையின் போது கம்மல் அணிந்து செல்லக்கூடாது என்று கூறப்பட்டதால் அவசரமாக அதை கழற்ற முயன்றார். அப்போது ஒரு பவுன் கம்மல் கீழே விழுந்து தொலைந்தது.

இதனால் மாணவியும் அவரது குடும்பத்தினரும் பதற்றமடைந்து தேடத் தொடங்கினர். அங்கு இருந்த பொதுமக்களும் உதவியுடன் தேடிய நிலையில், சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு கம்மல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...