ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.


கோவை:

இந்திய ரயில்வே துறையில் பணியாளர்கள் குறைக்கப்படுவதை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அண்மையில் ரயில்வே வாரியம், 14.8 லட்சம் பணியிடங்களில் சுமார் 2 சதவீதத்தை இந்த ஆண்டில் குறைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரயில் சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், பணியாளர்கள் குறைப்பு பாதுகாப்பு மற்றும் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இந்த முடிவிற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையம் முன்பு மத்திய அரசுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா, ரயில்வே துறையில் ஏற்கனவே 30,000 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், சமீபத்தில் அவை நிரப்பப்படாமல் ஆட்கள் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

காலியான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது விபத்துகளுக்கு காரணமாக அமைந்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், இப்படிப்பட்ட சூழலில் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது ரயில்வே துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் கூறினார். ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுவதால் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் அளித்த வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர், உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், பொதுத்துறையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...