அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரமாக மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் இன்று அவிநாசியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.



அவிநாசி சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக தொடங்கிய ரோடு ஷோ, லிங்கேஸ்வரர் கோவில் தேர் நிலை வரை நடைபெற்றது. இதில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து மோகன் யாதவ் கலந்து கொண்டார்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய அவர், “அவிநாசி புனித பூமியில் வாக்கு கேட்டு வந்துள்ளேன். நாடு முழுவதும் நிலவும் எழுச்சியைப் போல இங்கும் எல்.முருகனுக்கு வாக்களியுங்கள். சாதாரண மக்கள் கூட பிரதமராகவும் அமைச்சராகவும் வரலாம். ஆனால் திமுகவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பதவிக்கு வர முடியும்,” என்றார்.



மேலும், “நமது பாரம்பரியம், கலாச்சாரம் கோவில்களில் உள்ளது. ஆனால் திமுக கோவில்களுக்கும் சனாதனத்திற்கும் எதிராக உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எல்.முருகன், “இது திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம். ஊழல், லஞ்சம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இரட்டை எஞ்சின் ஆட்சி அமைந்தால் 2-ஆம் கட்ட அத்திக்கடவு திட்டம் நிறைவேறும். அவிநாசி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும்,” என்றார்.



மேலும், “ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் பெற்றுத் தரப்படும். போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவோம். மக்கள் மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும்,” என வாக்கு சேகரித்தார்.

Newsletter

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...

வேளாண் இளங்கலைப் பட்டப்படிப்பு, டிப்ளமோ சேர்க்கை: துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் பிரிவின் 2026-27 பட்டப்படிப்பு மற்றும் பட்ட...

Coimbatore to Hold Rally on Settling Disputes Through Mediation

As part of the nationwide initiative, the District Mediation Centre will organise an awareness rally on September 9, to...

கல்வி, ஆராய்ச்சியில் நெறிமுறைகளில் சமரசம் கூடாது: பாரதியார் பல்கலை ஆசிரியர் தின விழாவில் வலியுறுத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் அதேவேளையில், கல்வித் தரம், ஆராய்ச்சி நேர்மை, ஒழு...