கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, கோவை வளர்ச்சி, தமிழ்நாட்டு உரிமைகள் மற்றும் கூட்டணி வெற்றி குறித்து உரையாற்றினார்.


கோவை: கோவை ராஜவீதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.



அப்போது பேசிய அவர், “அம்மன் குளம், கல்லுக்குழி, கெம்பட்டி காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களின் மனநிலையும் தேவைகளும் எனக்கு நன்கு தெரியும். இந்த தொகுதியில் நான் நடந்து செல்லாத இடமே இல்லை. செந்தில் பாலாஜியிடம் கூட ‘இது நம் தொகுதி’ என்று கூறியுள்ளேன். எனக்குக் கிடைத்த வாக்குகள் பணம் கொடுத்து வாங்கப்பட்டவை அல்ல; மக்களின் நம்பிக்கையால் கிடைத்தவை. அதேபோல் இந்த முறை செந்தில் பாலாஜிக்கும் மக்களின் ஆதரவு கிடைக்கும்,” என்றார்.



மேலும், “என் நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து முதல் திட்டமாக கோவை தெற்கு தொகுதிக்கே நிதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் நீச்சல் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோவையுடன் எனக்கு நீண்டநாள் உறவு உள்ளது. ஜி.டி. நாயுடு பெயரில் பாலம் அமைக்கப்பட்டது சரியான முடிவு,” என தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து, “தமிழக வளர்ச்சியைப் பற்றிய தரவுகள் வடக்கிலிருந்தே வருகிறது. 15 கட்சிகளை இணைக்கும் திறமை அனைவருக்கும் வராது. திமுகவை ஒழிக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு ஒரே முதலாளி தான்; அவர் வடக்கில் இருக்கிறார்,” என்றார்.

மேலும், “என் ஊருக்கு ஏன் மெட்ரோ வரவில்லை என்று கேட்கும் புத்திசாலித்தனமான மக்கள் கோவையில் உள்ளனர். பாட்னாவை விட தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை எந்த வகையிலும் குறைவானது இல்லை,” என்றும் கூறினார்.

செந்தில் பாலாஜியை பாராட்டிய அவர், “100 வார்டுகளில் 96 வார்டுகளை வெற்றி பெற்றவர் செந்தில் பாலாஜி. அந்த வெற்றி மீண்டும் தொடரும். முதல்வர் அவருக்கு கொடுத்த பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றுவார். கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது,” என்றார்.

இறுதியாக, “கொங்கு மண்டலம் செழித்தால் தமிழகம் முழுவதும் செழிக்கும். இங்கு வளர்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. வடவர் படையெடுப்பை முறியடிப்போம். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இது. உதயசூரியன் உங்கள் சின்னம்,” என்று வாக்கு சேகரித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...