வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் கைது

நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் அவமதிக்கப்பட்டதை கண்டித்து கோவை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீட் தேர்வின் போது விதிமுறைகள் என்ற பெயரில் மாணவ, மாணவிகள் அலைகழிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக கேரளாவில் மாணவி ஒருவரின் உள்ளாடை சோதனை என்ற பெயரில் அகற்றப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும், தேர்விற்கு முழுக்கை சட்டை அணிந்து சென்ற மாணவர்களின் சட்டைகள் வெட்டப்பட்டன. மேலும், நீட் வினாத்தாள்  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு ஒரு மாதிரியாக இருந்ததாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இந்நிலையில், மாணவர்களை மன உளச்சலுக்கு ஆளாக்கிய மத்திய அரசை கண்டித்து கோவை வருமான வரித்துறை அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

அப்போது மாணவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து வருமான வரித்துறை அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து போராடிய இந்திய மாணவர் சங்கத்தினர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், நீட் தேர்வின் போது மாணவர்களை மன அழுத்திற்கு உள்ளாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...