ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர், மெட்ரோபோலிஸ் இணைந்து "கலாச்சாரம் காக்க ஒரு வரலாற்று கருத்தரங்கு"


மூவாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றையும், கலாச்சாரத்தையும் கொண்ட இந்திய நாட்டின் வளமைகளை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், அவற்றை பாராட்டி பாதுகாக்கவும், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர், மெட்ரோபோலிஸ் இணைந்து கலாச்சாரம் காக்க ஒரு வரலாற்று கருத்தரங்கினை நடத்த திட்டமிட்டுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் நடத்தப்பட்ட இரண்டு நாள் கருத்தரங்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இந்த கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



இந்த ஆண்டு பல்லவர்கள், பாண்டியர்கள், சாளுக்கியர்கள் மற்றும் ராண்டிரகூடர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் பற்றிய இரண்டு கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான 400 ஆண்டு கால வரலாறு இதில் இடம்பெறுகிறது.

இந்த கால கட்டத்தில் தென்னிந்தியா முழுவதையும் அண்ட பேரரசுகள், கோவில் கட்டமைப்புகள் மற்றும் நாட்டின் சமுதாய பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளனர். இது பற்றிய கருத்தரங்கு கோவை எஸ்என்ஆர் கல்லூரி கருத்தரங்கில் வரும் மே12 மற்றும் 13ம் தேதிகளில் இரண்டு நாள் கருத்தரங்குகளாக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளன. 13 அமர்வுகளாக நடக்க உள்ள இதில், பல்வேறு கல்வியாளர்கள் பங்கேற்று படத்தொகுப்பு விளக்கங்கள் அளிக்கவுள்ளனர்.

மேலும் டாக்டர் ஆர்.நாகசாமி தலைமை ஏற்கும் இந்த நிகழ்வில், புனேயில் சிறந்த கல்வியாளரான டாக்டர் யு.டெக்லுர்கர், மைசுரிலிருந்து எம்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, விஜயவாடாவிலிருந்து டாக்டர் இ.சிவநாகி ரெட்டி மற்றும் முனைவர் சித்ரா மாதவன், முனைவர் வெங்கட்ராமன், முனைவர் டி.சத்தியமுர்த்தி, பேராசிரியர் சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த கருத்தரங்கில் பொதுமக்களும் பங்கேற்று மகிழ்ச்சியடையலாம். சிறிய அளவிலான தொகை, மதிய உணவுக்கும் செலுத்த வேண்டும். இரண்டு நாள் நடக்கும் இந்த கருத்தரங்கில், மாணவர்கள் தங்களது அடையாள அட்டையுடன் வந்தால் இலவசமாக பங்கேற்கலாம். இந்த நிகழ்வு சீக்சியா அமைப்பின் ஆதரவுடன் நடக்கிறது. இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு 9842251510 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...