கோவையில் சொத்து வரி உயர்வை எதிர்த்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்

கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இன்று (அக்டோபர் 8) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைந்தது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கண்டன பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் 100% வரி உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், வருடா வருடம் வரி உயர்வு மக்களை பாதிக்கும் என்றும் வேலுமணி தெரிவித்தார்.



கொரோனா காலத்திலும் மக்களை கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரிகளை உயர்த்தவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மின் கட்டண உயர்வால் கோவையில் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு தொழில்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.



போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்றும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் சாலைகள், பாலங்கள், அத்திக்கடவு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் வேலுமணி தெரிவித்தார். இப்போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று முடிவடைந்தது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...