கோவையில் சிறுகுறு தொழில் நிறுவனங்களை காப்பாற்ற மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் - எஸ்பி வேலுமணி வலியுறுத்தல்

கோவையில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், சொத்து வரி உயர்வு எதிர்ப்பு மனித சங்கிலி போராட்டம் குறித்து எஸ்பி வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மின்கட்டண உயர்வு ரத்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது.



Coimbatore: கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்பி வேலுமணி, எடப்பாடி பழனிச்சாமியின் ஆணையின்படி கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்று மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றதாகக் கூறினார். அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் பணி 70% முடிந்துவிட்டதாகவும், விரைவில் முழுமையாக முடிவடையும் எனவும் தெரிவித்தார்.

திமுக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வரியை உயர்த்தியதையும், வரி செலுத்த தாமதமானால் வட்டி வசூலிக்கப்படும் என்ற நிலையை உருவாக்கியதையும் அவர் கண்டித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வரும் அக்டோபர் 8 அன்று மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவித்தார்.

அக்டோபர் 17 அன்று அதிமுகவின் 53வது ஆண்டு துவக்க விழாவை கோவையில் உள்ள மூன்று மாவட்டங்கள் சார்பாகவும் சிறப்பாகக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதாக வேலுமணி தெரிவித்தார். மேலும், திமுக அரசு கோவைக்கு எந்தத் திட்டமும் தரவில்லை என்றும், மக்கள் கடுமையாக அவதியுற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

"கோவையில் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் அழிந்து போகும் சூழலில் இருக்கிறது. அவற்றைக் காப்பாற்ற மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்," என வேலுமணி வலியுறுத்தினார். சொத்துவரி, மின்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் 8 அன்று நடைபெறவிருக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் எனவும் அழைப்பு விடுத்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...