கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன

கோவை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையம், தென் சங்கம்பாளையம், பிள்ளையப்பன்பாளையம் மற்றும் கணியூர் ஆகிய பகுதிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. பெரியநாயக்கன்பாளையம், தென் சங்கம்பாளையம், பிள்ளையப்பன்பாளையம் மற்றும் கணியூர் ஆகிய பகுதிகளில் இந்த கூட்டங்கள் நடைபெற்றன.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகளிடம் பொது மக்கள் மனுக்களை வழங்கினர். மேலும், புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



தென் சங்கம்பாளையம் ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் எஸ் ஆர் அண்ணாதுரை தலைமையில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்தனர்.

பிள்ளையப்பன்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், தலைவர் இலட்சுமண மூர்த்தி தலைமையில் ஊராட்சி வரவு செலவுகள் படித்தல், தூய்மை பணியாளர்களை கௌரவித்தல், பால்வினை நோய்கள் குறித்த உறுதிமொழி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.



சூலூர் வட்டம் கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொள்ளுப்பாளையம் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு அந்தந்த பகுதியில் உள்ள குறைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கினார்கள். இலட்சுமி நகர் பகுதியில் உள்ள கோரிக்கைகளை இலட்சுமி வினாயகா மக்கள் சேவை சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இந்த கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளின் வளர்ச்சிக்கான கோரிக்கைகளை முன்வைத்தது பாராட்டத்தக்கது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.06.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...