ஆனைக்கட்டி பகுதியில் மண் எடுப்பு குறித்த ஆய்வு: மாவட்ட ஆட்சியர் விளக்கம்

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, ஆனைக்கட்டி பகுதியில் மண் எடுப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வு பற்றி விளக்கமளித்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி 19 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.



Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, உக்கடம் பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற உலக முதியோர்கள் தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ஆனைக்கட்டி பகுதியில் நடத்தப்பட்ட மண் எடுப்பு குறித்த ஆய்வு பற்றி விளக்கமளித்தார்.

ஆட்சியர் கூறுகையில், "உயர்நீதிமன்ற வழிக்காட்டுதலின் படி, மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய சேர்மன், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து கோவையில் இரு தினங்களாக தொண்டாமுத்தூர், ஆனைக்கட்டி பகுதிகளில் மண் எடுப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டோம். மொத்தம் 19 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்பகுதியில் மண்ணின் தரம் குறித்தும், ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்படும்," என்றார்.

ஆனைக்கட்டி பகுதியில் ஆய்வு மேற்கொள்ள சென்றபோது, அங்கு செயல்படும் தனியார் ரிசார்ட் சம்பந்தமாக பொதுமக்கள் முறையிட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர், "அந்த ரிசார்ட் மீது ஒருசில பிரச்சினைகள் குறித்து மக்கள் சிலர் குறிப்பிட்டனர். குறிப்பாக வழித்தடங்கள் குறித்து தெரிவித்தனர். இது சம்பந்தமாக மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய சேர்மன் முடிவெடுப்பார்," என்றார். மேலும், "ரிசார்ட் பிரச்சனை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தால் விசாரணை மேற்கொள்ளப்படும்," என்று உறுதியளித்தார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...