கோவையில் இருந்து கோவாவுக்கு இண்டிகோ நிறுவனம் மீண்டும் விமான சேவை தொடங்குகிறது

அக்டோபர் 27 முதல் கோவையில் இருந்து கோவாவுக்கு இண்டிகோ நிறுவனம் தினசரி விமான சேவையை தொடங்குகிறது. கோவை விமான நிலையத்தில் புதிய சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


Coimbatore: கோவையில் இருந்து கோவாவுக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் மீண்டும் விமான சேவை தொடங்கப்படுகிறது. கோயம்புத்தூர் நெக்ஸ்ட் அமைப்பின் தலைவர் சதீஷ் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய விமான நிலையமான கோவையில் இருந்து தற்போதுள்ள 27 புறப்பாடுகளில் இருந்து தினமும் 30-க்கும் அதிகமான புறப்பாடுகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் கோவை சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் கடந்த வாரம் முதல், ஹைதராபாத்துக்கு 26 வாராந்திர சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வியாழன் மற்றும் சனிக்கிழமை தவிர இண்டிகோவின் தினசரி இயக்கப்படும் 3 விமானங்களுக்கு பதிலாக 4 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

அக்டோபர் 1 முதல் பெங்களூருக்கு 28 வாராந்திர சேவைகளை இண்டிகோ இயக்குகிறது. தினசரி 4 சேவைகள் இருக்கும். மேலும், இண்டிகோ நிறுவனம் கோவையில் உள்ள ஒரே ஏடிஆர் விமானத்துடன் அக்டோபர் 1 முதல் கோவாவுக்கான தினசரி விமான சேவைக்கான முன்பதிவைத் தொடங்குகிறது. அக்டோபர் 27-ஆம் தேதியிலிருந்து இந்த சேவை தொடங்குகிறது.

அத்துடன், இண்டிகோ ஏர்லைன்ஸ் கோவையில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமான சேவையை மாற்றியமைத்துள்ளது. ஆனால் அபுதாபியில் இருந்து விமான அட்டவணை அப்படியே உள்ளது.

கோவை மற்றும் சிங்கப்பூர் இடையே அக்டோபர் 27 முதல் தினசரி இடைநில்லா விமானங்கள் இயக்கப்படும் என்றும் இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளதாக சதீஷ் தெரிவித்துள்ளார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...