மேட்டுப்பாளையம் நகர்மன்றக் கூட்டத்தில் பதற்றம்: திமுகவினர் தாக்குதலில் அதிமுக உறுப்பினர் படுகாயம்

மேட்டுப்பாளையம் நகர்மன்றக் கூட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சையால் பதற்றம். அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட். திமுகவினர் தாக்குதலில் அதிமுக உறுப்பினர் குரு பிரசாத் படுகாயம். கோவை அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சை.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சியில் இன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் ஒருவர் திடீரென தண்ணீர் குடிக்கும் டம்ளரை வீசி எறிந்ததால் பிரச்சனை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஒழுங்கு நடவடிக்கையாக அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் 9 பேரை அடுத்த இரண்டு நகர்மன்றக் கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக நகராட்சித் தலைவர் மெஹரீபா பார்வின் அறிவித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் 9 பேர் நகராட்சிக் கூட்ட அரங்கில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். நகராட்சி ஆணையாளர் மற்றும் மேட்டுப்பாளையம் காவல்துறையினர் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி இரவு 8 மணிக்கு உடன்பாடு ஏற்பட்டு நகர்மன்ற உறுப்பினர்கள் வெளியே வந்தனர்.

அப்போது நகராட்சி அலுவலகத்தில் காத்திருந்த திமுக நிர்வாகிகள் சிலர் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்களைத் தாக்கினர்.



இந்தத் தாக்குதலில் அதிமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் குரு பிரசாத் அவர்களுக்குக் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக குரு பிரசாத் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிமுக மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அந்தக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மருத்துவமனை வளாகத்தில் கூடினர்.

குரு பிரசாத்தின் உடல் நிலை மோசமடைந்ததால், உடனடியாக அவரை மருத்துவர்கள் உயர் சிகிச்சை அளிக்க கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாக்குதலில் அவருக்குப் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தச் சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...