மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் பெண் நகராட்சி தலைவர் மீது டம்ளர் வீச்சு: பரபரப்பு

மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் பெண் நகராட்சி தலைவர் மீது டம்ளர் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக, திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் வெடித்தது. 9 அதிமுக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.



Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில் பெண் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன் மீது டம்ளர் வீசப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பாகவே, நகராட்சியில் தெருவிளக்குகள் எரிவதில்லை, குடிநீர் சரியாக விநியோகம் செய்வதில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அதிமுக கவுன்சிலர்கள் எழுப்பினர்.



இந்நிலையில், திமுக கவுன்சிலர் நவீன், வருவாய் துறைக்கு சொந்தமான நீர்வழி பாதையை ஆக்கிரமித்து நகராட்சி சாலை அமைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ஒரு பெண் அதிகாரி விளக்கம் அளித்துக் கொண்டிருந்தபோது, அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஒரு கவுன்சிலர் திடீரென டம்ளரை எடுத்து நகராட்சி தலைவர் மீது வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக திமுக கவுன்சிலர்கள் நகராட்சி தலைவர் இருக்கை முன்பு திரண்டு அதிமுக கவுன்சிலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் உள்ளே அழைக்கப்பட்டு கவுன்சிலர்களை அப்புறப்படுத்த முயன்றனர்.

நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வின், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறி அங்கிருந்து வெளியேறினார். இதனைக் கண்டித்தும், நகராட்சியில் சரிவர பணிகள் மேற்கொள்ளாத நிர்வாகத்தைக் கண்டித்தும் அதிமுக கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நகராட்சி தலைவரை அச்சுறுத்தும் விதமாகவும் கூட்டத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாகக் கூறி, அதிமுகவைச் சேர்ந்த 9 நகர்மன்ற உறுப்பினர்களை அடுத்த இரண்டு கூட்டங்களுக்கு பங்கேற்காதவாறு தடை விதிப்பதாகவும், அவர்களை இடைநீக்கம் செய்வதாகவும் நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...