மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் விடுதலையை கொண்டாடிய திமுகவினர்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


கோவை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



காரமடை கிழக்கு ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். காரமடை அருகே தென் திருப்பதி நால்ரோடு பகுதியில், காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ். எம். டி. கல்யாணசுந்தரம் தலைமையில் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளேபாளையம் ஊராட்சி நால்ரோடு பகுதியில், ஊராட்சி தலைவர் பிரஸ் சிவகுமார் தலைமையிலும், துணைத் தலைவர் சுரேந்திரன் முன்னிலையிலும் கொண்டாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட அறநிலையத்துறை அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரமும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.



மேட்டுப்பாளையம் நகரில், நகர திமுக சார்பில் நகர செயலாளர்கள் முனுசாமி, முகமது யூனூஸ் ஆகியோர் தலைமையிலும், முன்னாள் எம்எல்ஏ பா.அருண்குமார் முன்னிலையிலும் கொண்டாட்டம் நடைபெற்றது.



அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், பேருந்து நிலையம் அருகே பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் திமுகவினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...