தொண்டாமுத்தூரில் புதிய வேளாண் விரிவாக்க மைய கட்டிடத்திற்கு 9 செண்ட் நிலம் ஒதுக்கீடு

கோவை தொண்டாமுத்தூரில் புதிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் அமைக்க 9 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேளாண் உதவி இயக்குனரிடம் உத்தரவு நகலை வழங்கினார்.


Coimbatore: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் புதிய ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் அமைக்க 9 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்திற்கான உத்தரவு நகலை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, வேளாண் உதவி இயக்குனர் சக்திவேலிடம் வழங்கினார்.

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், பெருந்தலைவர் மதுமதி விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற கவுன்சிலர்கள் மாமன்றக் கூட்டத்தில் இந்த 9 செண்ட் நிலம் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உத்தரவு நகல் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலாராணி, தொண்டாமுத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் மதுமதி விஜயகுமார் மற்றும் கவுன்சிலர்கள் உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தப் புதிய கட்டிடம் அமைவதன் மூலம், அப்பகுதி விவசாயிகளுக்கு வேளாண் தொடர்பான சேவைகள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...