கோவையில் சீருடை தொகை வழங்காததால் அரசுப் பேருந்துகள் ஜப்தி

கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சீருடைக்கான தொகையை வழங்காததால், நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.


Coimbatore: கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சீருடைக்கான தொகையை வழங்காததால், நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு ஒப்பந்தத்தின்படி வருடத்திற்கு நான்கு ஜோடி சீருடைகளுக்கான நிதி வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த தொகை பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.



இது தொடர்பாக, கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் நடத்துநர் மோகன்ராஜ் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் ஆறு ஆண்டுகளுக்கான 46,583 ரூபாய் வழங்க உத்தரவிட்டது. ஆனால், போக்குவரத்துக் கழகம் இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை.

இதேபோல், நடத்துநர் கே.பி. சக்திவேல் என்பவரும் 2007 முதல் வழங்கப்படாத பணி வரன்முறை நிலுவைத் தொகை குறித்து வழக்கு தொடர்ந்தார். இந்த இரண்டு வழக்குகளின் அடிப்படையில், நீதிமன்றம் இரண்டு மாநகர பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகள் தற்போது நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சீருடை பணியாளர்கள் சங்கம், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு உடனடியாக சீருடைத் தொகை மற்றும் பணி வரன்முறை நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...