2026-ல் ஆட்சியில் பங்கு: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள்

கோவை அவினாசி சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டிய போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 2026-ல் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு பெறுவோம் என்ற வாசகம் கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore: கோவை அவினாசி சாலையில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒட்டிய போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த போஸ்டர்களில் "2026-ல் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை ரமேஷ் என்ற பெயரில் உள்ள முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "எழுச்சித் தமிழன் முதல் முதலில் அரசுப் பணியில் சேர்ந்தது கோவையில் தான். அரசியல் பயணத்தை தொடங்குவதற்காக அடிக்கல் நாட்டிய பின்பு மதுரைக்கு மாற்றலாகி சென்று டி.பி.ஐ என்ற இயக்கத்தை வழி நடத்தினார். பின்னர் தலித் தலைவர் மலைச்சாமி அவர்களுடன் கைகோர்த்து அவருக்குப் பின் அதனை வழி நடத்தி, பின்பு அரசியல் கட்சியாக மாற்றி தேர்தல் அரசியலை புறக்கணித்து விடுதலை சிறுத்தை இயக்கத்தை தொடங்கினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த பதிவில், "எனது அருமை நண்பர்கள் கோவையில் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்ற புதிய அத்தியாயத்தை முதன் முதலில் கோவையில் தொடங்கி உள்ளார்கள். அவர்களுக்கு கொங்கு சம்பத் மற்றும் அனைத்து விடுதலை சிறுத்தை நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்" எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னையில் இருந்து கோவை சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்ணின் மைந்தன், ஒயிட்ஹவுஸ் ந.செல்லத்துரை மத்திய சென்னை நாடாளுமன்ற மேலிட பொறுப்பாளர் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். "எழுச்சித் தமிழர் முதன் முதலில் கோவையில் காலடி வைத்த மண்ணில் இது போன்ற புரட்சி முதலில் தோன்றி இருக்கின்றது. உங்களுக்கு வாழ்த்துக்கள்" என்றும் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்கள் மற்றும் சமூக வலைதள பதிவுகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...