பெரியாரின் 146வது பிறந்தநாள்: கோவையில் அதிமுக சார்பில் மரியாதை

கோவையில் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் இதய தெய்வம் மாளிகையில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவையில் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் இதய தெய்வம் மாளிகையில் அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

கோவை மாநகர் மாவட்ட அதிமுக கழக செயலாளரும், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் K. அர்ச்சுணன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும், கோவை மாநகர் மாவட்டம் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான KR. ஜெயராம் முன்னிலையில் பெரியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செ.ம வேலுச்சாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் R. பிரபாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும், மாவட்ட அதிமுக கழக நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் பல அதிமுக கழக நிர்வாகிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பெரியாரின் சிந்தனைகளையும், சமூக சீர்திருத்த பணிகளையும் நினைவு கூரும் வகையில் இந்த மரியாதை நிகழ்வு நடைபெற்றது. அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெரியாரின் கொள்கைகளுக்கு தங்கள் மரியாதையை தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...