அன்னூர் வாழைத்தார் மையத்தில் நேந்திரன் வாழை விலை சரிவு: விவசாயிகள் ஏமாற்றம்

அன்னூர் வாழைத்தார் மையத்தில் நேந்திரன் வாழை விலை எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தது. கேரளாவில் ஓணம் விழா ரத்து செய்யப்பட்டதே இதற்கு காரணம் என தெரிகிறது.


Coimbatore: அன்னூர் சாலையில் உள்ள வாழைத்தார் மையத்தில் நேந்திரன் வாழை விலை எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூர் சாலை வாழைத்தார் மையத்தில் நேற்று (செப்டம்பர் 11) நடைபெற்ற ஏலத்திற்கு 9,000க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் 7,000க்கும் மேல் நேந்திரன் வாழைத்தார்கள் இருந்தன.

ஏலத்தில் நேந்திரன் வாழை ஒரு கிலோ குறைந்தபட்சம் 20 ரூபாய்க்கும், அதிகபட்சம் 27 ரூபாய்க்கும் விற்பனையானது. கதளி வாழை ஒரு கிலோ குறைந்தபட்சம் 30 ரூபாய்க்கும், அதிகபட்சம் 60 ரூபாய்க்கும் ஏலம் போனது. இந்த வாரம் கதளி வாழையின் விலை குறையாமல் இருந்தது.

பொதுவாக கேரளாவில் ஓணம் திருவிழாவை முன்னிட்டு நேந்திரன் வாழைக்காயின் தேவை அதிகமாக இருப்பதால் விலை உயர்வாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வயநாடு நிலச்சரிவு காரணமாக கேரளாவில் ஓணம் விழா ரத்து செய்யப்பட்டதே விலை சரிவுக்கு காரணம் என தெரிகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...