கோவையில் ஆட்டோ டிரைவர்கள் இடையே கத்தியுடன் மோதல்: ஒருவர் காயம்

கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே இரு ஆட்டோ டிரைவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தார். சம்பவம் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது.


Coimbatore: கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மாலை நடு ரோட்டில் இரண்டு வாலிபர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் அவர்கள் கற்களை எடுத்து வீசியதுடன், கத்தியால் துரத்தியும் அட்டகாசம் செய்தனர். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் சுந்தராபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டனர்.

மேற்கொண்ட விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான கதிரேசன் (35) மற்றும் உதய சூரியன் (30) என்பது தெரியவந்தது. இருவருக்கும் அடிக்கடி ஆட்டோ சவாரி எடுப்பதில் தகராறு இருந்து வந்தது தெரியவந்தது.

நேற்று (செப்டம்பர் 11) ஏற்பட்ட தகராறின் போது, கதிரேசன் கத்தியால் குத்தியதில் உதய சூரியனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த உதய சூரியன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கதிரேசனிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மோதல் காட்சிகள் வீடியோவாக பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...