கோவை உக்கடம் மேம்பாலத்தின் சுங்கம் பைபாஸ் இணைப்பு ராம்ப்புகள் திங்கள்கிழமை திறப்பு

கோவை உக்கடம் மேம்பாலத்தை சுங்கம் பைபாஸ் உடன் இணைக்கும் இரண்டு ராம்ப்புகள் செப்டம்பர் 9 ஆம் தேதி திங்கள்கிழமை திறக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


Coimbatore: கோவை உக்கடம் மேம்பாலத்தை சுங்கம் பைபாஸ் உடன் இணைக்கும் இரண்டு ராம்ப்புகள் வரும் திங்கள்கிழமை (செப்டம்பர் 9) திறக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 9 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் M.K. Stalin கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மேம்பால பணிகள் ஜூலை மாதத்தில் நிறைவடைந்தது. ரூ.481.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த 3.8 கிலோமீட்டர் நீள மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் சுங்கம் செல்வதற்கான ஏறு, இறங்குதளம் வாலாங்குளம் வழியே அமைக்கப்பட்டு வந்தது.



திறப்பு விழாவின் போது முழுமை அடையாமல் இருந்த இந்த இணைப்பு ராம்ப்புகளை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடித்திட திட்டமிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. தற்போது, சுங்கம் பைபாஸ் உடன் உக்கடம் மேம்பாலத்தை இணைக்கக்கூடிய ஏறுதளம், இறங்குதளத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த ராம்ப்புகளில் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய இணைப்பு ராம்ப்புகள் திறக்கப்படுவதால், உக்கடம் மேம்பாலத்தில் இருந்து சுங்கம் பைபாஸ் சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகளின் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...