கோவை அரசு போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்திய 'லிங்க் டிக்கெட்' வசதி

கோவை அரசு போக்குவரத்துக் கழகம் பயணிகளுக்காக 'லிங்க் டிக்கெட்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி மூலம் பயணிகள் முன்பதிவு செய்த பேருந்துகளுடன் நகர பேருந்துகளையும் இணைத்து பயணிக்க முடியும்.


கோவை: கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக 'லிங்க் டிக்கெட்' எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்துக் கழக கோட்ட மேலாண் இயக்குனர் ஸ்ரீதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில், கோவையில் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து தொலைதூர வழித்தடங்களில் முன்பதிவு வசதியுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முன்பதிவு செய்யும் பயணிகளின் வசதிக்காக, 'லிங்க் டிக்கெட்' வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியின் கீழ், பயணிகள் முன்பதிவு டிக்கெட் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.30 செலுத்தி, பேருந்து நிலையங்களில் இருந்து நகர பேருந்துகளில் வேறு இடங்களுக்குச் செல்லலாம். அதேபோல, வேறு இடங்களில் இருந்து இந்த மூன்று பேருந்து நிலையங்களுக்கும் செல்ல முடியும்.

இந்த 'லிங்க் டிக்கெட்' வசதியை காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும்போதோ அல்லது வந்திறங்கும்போதோ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மண்டல நகர பேருந்துகளில் இந்த வசதியை பயணிகள் தங்கள் பயண நேரத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு அல்லது பின்பு பயன்படுத்தலாம். முன்பதிவு பயணச்சீட்டை நகல் எடுத்தோ, செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்தோ, நடத்துனரிடம் காட்டி பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...