கோவையில் ரூ.15.81 கோடி முதலீட்டு மோசடி: நிறுவன நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டுகள் சிறை

கோவையில் முல்லை குரூப் ஆஃப் கம்பெனி 387 முதலீட்டாளர்களிடம் ரூ.15.81 கோடி பெற்று மோசடி செய்தது. நிர்வாக இயக்குனர் குறிஞ்சிநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.15.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை: கோவை, காந்திபுரம் டாடாபாத் 7-வது வீதியில் முல்லை குரூப் ஆஃப் கம்பெனி என்ற பெயரில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என விளம்பரம் செய்தது.

இதை நம்பி ஏராளமான மக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், நிறுவனம் வாக்குறுதியளித்தபடி முதலீட்டாளர்களுக்கு வட்டி வழங்காமல் ஏமாற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் 2019-ஆம் ஆண்டு கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவில் புகார் அளித்தனர்.

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், மொத்தம் 387 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.15 கோடியே 81 லட்சத்து 35 ஆயிரம் முதலீடு பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த குறிஞ்சி என்கிற குறிஞ்சிநாதன் (42) மற்றும் நிறுவன ஊழியர்களான கதிர்வேல், அண்ணாதுரை, சத்தியமூர்த்தி, அருணாரெமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ஆகஸ்ட் 30 அன்று தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குறிஞ்சிநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 கோடியே 91 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற நான்கு ஊழியர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

நீதிபதி, விதிக்கப்பட்ட அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட 387 முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரித்து வழங்க உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைத்ததாக கருதப்படுகிறது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...