உடுமலை நகர பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை முகாம்: 500க்கும் மேற்பட்ட படிவங்கள் வழங்கப்பட்டன

உடுமலை நகர பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் சார்பு அணி தலைவர்களுக்கு வழங்கப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகர பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாம் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின் பேரிலும், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி அறிவுறுத்தலின் படியும் ஏற்பாடு செய்யப்பட்டது.



உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நகர பொதுச்செயலாளர்கள் தம்பிதுரை மற்றும் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் உடுமலை நகர மண்டல பொறுப்பாளரும் மாவட்ட பொதுச் செயலாளருமான வடுகநாதன், மற்றும் உடுமலை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் மாநில விவசாய அணி செயலாளருமான மௌனகுருசாமி ஆகியோர் உறுப்பினர் சேர்க்கை குறித்து விரிவான விளக்கம் அளித்தனர்.



இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் உடுமலை நகர பாஜக பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் சார்பு அணி தலைவர்களுக்கு வழங்கப்பட்டன.



உறுப்பினர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள உடுமலை நகர பொறுப்பாளர்களான உமா குப்புசாமி, நாச்சியப்பன், குருசாமி, பாலசுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.



இந்த முக்கிய நிகழ்வில் மாவட்ட வழக்கறிஞர் பார்வையாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் கலா, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா, நகர மகளிர் அணி தலைவர் ரதி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பால்ராஜ், இளைஞர் அணி பொதுச் செயலாளர் பாலகுரு, நகர செயலாளர்கள் ஹரிகரன், முருகேசன், நகர துணைத்தலைவர் செல்வி, நகர மகளிர் அணி பொருளாளர் விஜயலட்சுமி, சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...