கோவையில் அரசு விடுமுறை அன்று இயங்கிய பள்ளி - மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவால் மாணவர்கள் உற்சாகத்துடன் வீடு திரும்பினர்

கோவையில் கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை நாளில் இயங்கிய CBSE பள்ளி, மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவுக்குப் பிறகு மதியம் விடுமுறை அறிவித்தது. மாணவர்கள் உற்சாகத்துடன் வீடு திரும்பினர்.



Coimbatore: கோவையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்த பொது விடுமுறையை மீறி இயங்கிய ஒரு பள்ளி, மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவுக்குப் பிறகு மதியம் விடுமுறை அளித்தது.

புளியகுளம் பகுதியில் உள்ள வித்யா நிகேதன் என்ற CBSE பாடத்திட்டப் பள்ளி இன்று காலை முதல் இயங்கியது. LKG மற்றும் UKG மாணவர்களுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால் மற்ற வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளி சீருடையில் வந்து வகுப்புகளில் கலந்து கொண்டனர்.



இந்த விவகாரம் மாவட்ட கல்வி அலுவலரின் கவனத்திற்கு சென்றதும், உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் மதியம் 12 மணிக்கு விடுமுறை அறிவித்தது. பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் இந்த தகவல் அனுப்பப்பட்டது.

மதியம் எதிர்பாராத விடுமுறை கிடைத்ததால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். அரசு விடுமுறை நாளில் பள்ளி இயங்கியது குறித்து பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது.

பள்ளி நிர்வாகம் கூறுகையில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களுக்காகவே பள்ளி திறந்திருந்ததாகவும், மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவைப் பெற்றவுடன் உடனடியாக விடுமுறை அறிவித்ததாகவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...