கோவை விமான நிலைய நில விவகாரம்: வானதி ஸ்ரீனிவாசனை கண்டித்த முன்னாள் எம்பி பி.ஆர்.நடராஜன்

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை நிபந்தனையின்றி ஒப்படைக்க கோரிய பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசனை முன்னாள் எம்பி பி.ஆர்.நடராஜன் கடுமையாக சாடினார்.


கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை எவ்வித நிபந்தனையுமின்றி விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசனின் கோரிக்கைக்கு முன்னாள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் விமான நிலையமாக கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் திகழ்வதாகவும், சர்வதேச விமானங்கள் கூடுதலாக வந்து செல்லும் வகையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான தமிழ்நாடு அரசு அதற்கான முனைப்பான பணிகளை முடுக்கிவிட்டதாகவும், விமான நிலைய விரிவாக்கத்திற்கு என ரூ.2,100 கோடி செலவு செய்து நிலங்களை கையகப்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்நிலங்களை ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும், விமான நிலைய ஆணையம் விரிவாக்கப் பணிகளை செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு, நிலங்களை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க நிபந்தனை விதித்துள்ளதாகவும், மாநில அரசால் ஒப்படைக்கும் நிலங்களைக் கொண்டு விரிவாக்கம் செய்யப்படும் போது எதிர்காலத்தில் தனியாருக்கு தாரை வார்க்கப்படக் கூடாது என்பதே அந்த நிபந்தனை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், விமான நிலைய ஆணையம் இந்த நிபந்தனையை தளர்த்திட வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு ஏற்கனவே ஏழு விமான நிலையங்களை தனியாருக்கு தாரை வார்த்து உள்ளதாகவும், மேலும் 16 விமான நிலையங்களை விற்க ஏற்பாடுகள் செய்து வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழும நிறுவனத்திற்கு விற்பனை செய்ததை சுட்டிக்காட்டி, அதன் பிறகு அங்கு விமான நிறுத்த கட்டணங்கள், வர்த்தக நிறுவனங்களின் வாடகை, வாகன நிறுத்துமிட கட்டணங்கள் உள்ளிட்டவை பல மடங்கு உயர்த்தப்பட்டதாகவும், விமான பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்திற்கு நிலம் அளித்தோர் அனைவரும் சாதாரண பொதுமக்களே என்றும், இம்மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பில் வாங்கிய நிலங்களை சந்தை மதிப்பிற்கும் பல மடங்கு குறைவாக அரசுக்கு அளித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் அளித்த நிலத்தை, தனியார் லாபம் பெறும் வகையில் அரசு பயன்படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வானதி ஸ்ரீனிவாசன் முதலமைச்சரை சந்தித்து, விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை ஒப்படைப்பதில், மாநில அரசு நிபந்தனையை தளர்த்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததை கண்டித்துள்ளார். அதானி உள்ளிட்ட கார்ப்ரேட்டுகளின் தூதுவராய் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இறுதியாக, திமுக அரசு, இவர்களின் நோக்கங்களை உள்வாங்கிக் கொண்டு, ஏற்கனவே எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...