போதை ஒழிப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது - மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்

கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். போதை ஒழிப்பு, ஜவுளித்துறை மற்றும் பங்களாதேஷ் உறவுகள் குறித்து கருத்து தெரிவித்தார்.



கோவை: கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

போதை ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "போதை ஒழிப்பு நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. கஞ்சா அதிகமாக பிடிபட்டது என்று சொன்னால், கஞ்சா நடமாட்டம் அதிகமாகிறது என்று பொருள். அதனை கட்டுப்படுத்துகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் பார்க்க வேண்டும். முதல்வர் அவர்கள் கஞ்சாவையும் இதர போதை வஸ்துகளையும் ஒழிக்க எடுக்கின்ற அத்தனை முயற்சிகளையும் நான் வரவேற்கிறேன். அனைவரும் வரவேற்க வேண்டும்," என்றார்.

ஜவுளித்துறை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, "தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. இது ஜவுளித் தொழில் வெற்றி பெறுவதற்கு உதவுவதாக அமையாது. ஜவுளித்துறைக்கு அதிகமான உதவிகளை மாநில அரசு செய்தால்தான் இந்தத் தொழில் காலத்தை கடந்து நிற்கும். உலகம் முழுவதும் ஜவுளித் தொழில் வளர்ந்து வருகிறது. பங்களாதேஷில் இருந்து வியட்நாம் வரை இன்றைக்கு ஜவுளித் தொழில் பிரமாண்டமாக இருந்து வருகிறது. பர்மாவில் கூட ஜவுளித் துறையில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது," என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், "நம்முடைய பகுதியை விட்டு ஜவுளித் தொழில் வேறு நாட்டிற்கோ அல்லது வேறு மாநிலத்திற்கோ சென்று விடக்கூடாது என்று நினைத்தால், மாநில அரசு ஜவுளித் துறை சார்ந்த அத்தனை பேரையும் அழைத்து அவர்களது குறைகளை முழுமையாக கேட்டு உரிய உதவிகளை செய்ய வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

பங்களாதேஷ் உறவுகள் குறித்து பேசிய ஆளுநர், "பங்களாதேஷுடன் நீண்ட நெடிய உறவுகள் இருந்த போதிலும், எப்பொழுதெல்லாம் பங்களாதேஷில் மதவாத சக்திகள் கை ஓங்குகிறதோ, அப்பொழுதெல்லாம் நம்முடைய தேசத்தோடு இருக்கின்ற நெருக்கமான உறவுகளுக்கு சவால் வருகிறது. அதனை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். உலக அமைதிக்கு பங்களாதேஷும் இந்திய உறவும் மிகவும் முக்கியமானவை. இந்த உறவு மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

பொன் மாணிக்கவேல் வழக்கு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, "சிலை வழக்கு எந்த சூழலில் ஏற்பட்டது என தெரியவில்லை. எந்த அளவுக்கு முடிவு பெற்றுள்ளது என்பதை அறிந்த பிறகு பொறுத்திருந்து பார்ப்போம்," என்று பதிலளித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...