கோவையில் பருத்தி குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் துவக்கம்

கோவையில் இந்திய பருத்தி கூட்டமைப்பு மற்றும் இந்திய பருத்தி சங்கம் சார்பில் 'பருத்தி - எதிர்காலத்திற்கான நிலையான இழை' என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் துவங்கியது. பருத்தி தொழில் வளர்ச்சி குறித்து விவாதிக்க உள்ளனர்.


கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்திய பருத்தி கூட்டமைப்பு மற்றும் இந்திய பருத்தி சங்கம் சார்பில் 'பருத்தி - எதிர்காலத்திற்கான நிலையான இழை' (COTTON - The Sustainable Fibre Of The Future) என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் துவங்கியது.



இந்த கருத்தரங்கத்தின் துவக்க விழா ஆகஸ்ட் 9 அன்று மாலை நடைபெற்றது. இந்திய பருத்தி கூட்டமைப்பின் துணைத் தலைவரும் கருத்தரங்கின் சேர்மனுமான நடராஜ் விழாவை துவக்கி வைத்தார்.



இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவர் துளசிதரன் விழாவிற்கு தலைமை வகித்தார்.



இந்த விழாவில் KG குரூப் சேர்மன் பாலகிருஷ்ணன் மற்றும் L.S. மில்ஸ் சேர்மன் மணிவண்ணன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்திய பருத்தி கூட்டமைப்பின் தலைவர் துளசிதரன் பேசுகையில், "இந்தியாவிற்கும் பருத்திக்குமான தொடர்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. பருத்தி என்பது வணிகத்திற்கானதாக மட்டும் இல்லாமல் நமது கலாச்சார அடையாளமாகவும் திகழ்கிறது. பருத்தி உற்பத்திக்கு ஏதுவாக நம் நாட்டின் காலநிலை அமைந்துள்ளது. உலகச் சந்தையின் பருத்தி தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி பருத்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான வாய்ப்புகள் நம்மிடம் உள்ளது," என்றார்.

மேலும் அவர், "இந்த கருத்தரங்கம், இத்தகைய வாய்ப்புகள் குறித்து விவாதிக்கவும் திட்டங்கள் தீட்டி நம் இலக்கை அடைவதற்கும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்," என்றும் கூறினார்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கில், பல்வேறு ஆடை உற்பத்தி நிறுவனங்களும் வல்லுனர்களும் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...