ஆடிப்பெருக்கு: பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.


Coimbatore: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மனுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. அதிகாலையில் இருந்தே பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்து கொடிமரம் அருகே தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தனர்.



கோவில் நிர்வாகம் மூலம் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பாதுகாப்பு நலன் கருதியும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...