'திமுக ஆட்சி ரவுடிகளின் ஆட்சி' - கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து, திமுக ஆட்சியை ரவுடிகளின் ஆட்சி என்று குற்றம்சாட்டினார். மேலும் பூங்காக்கள் பராமரிப்பு, மத்திய சிறை மாற்றம், போதை ஒழிப்பு குறித்தும் கருத்து தெரிவித்தார்.


Coimbatore: கோவை ராம் நகர் அண்ணா பூங்கா சொர்ணாம்பிகா லேஅவுட்டில் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

வானதி சீனிவாசன் பேசுகையில், "கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்களின் பராமரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. MLA மேம்பாட்டு நிதியில் கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள் அமைத்துக் கொடுத்தாலும் மாநகராட்சி நிர்வாகத்தினர் பராமரிப்பது இல்லை. இது தொடர்பாக ஆணையாளரை நேரில் சந்தித்து பேசி இருக்கிறேன்" என்றார்.



மத்திய சிறையை மாற்றி செம்மொழி பூங்கா அமைக்கும் திட்டம் குறித்து, "மத்திய சிறைக்கு மாற்று இடம் பார்க்கவில்லை. பேரளவில் அடிக்கல் நாட்டப்பட்டு கொஞ்ச இடத்தில் மட்டும் வேலை நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.

"திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி என்பது எப்போதுமே ரவுடிகளின் ஆட்சிதான். தமிழகத்தில் தற்போது கூலிக்கு கொலை செய்யக்கூடிய கும்பல்கள் பெருகி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. இதைப் பற்றி கேட்டால் அமைச்சர்கள் அலட்சியமாக பதில் அளிக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார்.

வானதி சீனிவாசன் மேலும் கூறுகையில், "முறையான அனுமதி பெறாமல் அரசியல் தலைவர்களை கையில் வைத்துக்கொண்டு Resort கட்டி, முழுவதுமாக இயற்கையின் நலனை புறக்கணிக்கும் போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. பசுமை தீர்ப்பாயம், உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றின் தீர்ப்புகளின் மூலமாகத்தான் காடுகளும் மலைகளும் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது" என்றார்.

போதை ஒழிப்பு குறித்து, "முதல்வரும் நிர்வாகத்தில் இருப்பவர்களும் போதை எதிர்ப்புக்கான உறுதிமொழியை எடுத்தால் போதாது, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இறுதியாக, "மத்திய அரசாங்கம் எங்களிடம் இருக்கிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...