உடுமலை அருகே கடமான் வேட்டையாடிய 5 பேர் கைது: 4.5 கிலோ இறைச்சி பறிமுதல்

உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடமான் வேட்டையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். வனத்துறையினர் 4.5 கிலோ கடமான் இறைச்சியை பறிமுதல் செய்தனர். சம்பவம் ஜம்புக்கல்கரடு பகுதியில் நடந்தது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் கடமான் வேட்டையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். வனத்துறையினர் அவர்களிடமிருந்து 4.5 கிலோ கடமான் இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் யானை, புலி, மான், சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வனத்துறையினர் தினசரி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு கூட்டு புலனாய்வில் ஈடுபட்டிருந்த போது, ஜம்புக்கல்கரடு பகுதியில் கடமான் வேட்டையாடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக செயல்பட்ட வனத்துறையினர், ஆண்டியகவுண்டனூர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் கையில் பையுடன் சுற்றித் திரிந்த 5 நபர்களை பிடித்து உடுமலை வனச்சரகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.



விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் மலையாண்டிகவுண்டனூரை சேர்ந்த பிரபு (24), பரதராமன் (43), பெருமாள்புதூரை சேர்ந்த சதீஷ் (27), எலையமுத்தூரைச் சேர்ந்த மாணிக்கம் (24), வசந்தகுமார் (25) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் ஜம்புக்கல்கரடு மலைப்பகுதியில் கண்ணி வைத்து கடமானை வேட்டையாடி, அதன் இறைச்சியை விற்பனை செய்ய முயற்சித்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களிடமிருந்து 4.5 கிலோ கடமான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வனத்துறையினர், 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

EPFO கட்டாய உறுப்பினர் ஊதிய வரம்பு ₹25,000 ஆக உயர்வு

EPFO-வில் கட்டாய உறுப்பினர் சேர்க்கைக்கான மாத ஊதிய உச்சவரம்பு ₹15,000-ல் இருந்து ₹25,000 ஆக செப்டம்பர் 17 முதல் உயர்த்தப...

Festive Season: Special Trains to Operate Between Chennai and Kollam via Coimbatore

Southern Railway will operate weekly special trains between Chennai and Kollam via Coimbatore, Salem and Erode from Octo...

Severe Traffic Congestion in Coimbatore’s Madukkarai Sparks Urgent Plea to Expedite Railway Overbridge Work

Severe traffic congestion in Madukkarai is causing hardship to residents and Kerala-bound commuters. Delayed railway ove...

கோவை மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 86 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மேயர் ரங்...

கூடலூர் நகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு; தனியார் நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏஇடியிஎஸ் கொசுக்களின் உற்பத்தி...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...