உடுமலையில் வனத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம்: வன ஊழியர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உடுமலை வனசரக அலுவலகத்தில் வனத்துறை ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பல்வேறு சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உடுமலை வனசரக அலுவலகத்தில் வனத்துறை ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாம் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் ஆலோசனைப்படியும், துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா முன்னிலையிலும் நடத்தப்பட்டது.

இந்த மருத்துவ முகாமில், வனப் பணியாளர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் கண், பல் தொடர்பான பல்வேறு சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பொது மருத்துவர், கண் மருத்துவர், பல் மருத்துவர் உட்பட 5க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் இந்த முகாமில் பங்கேற்றனர்.



உடுமலை வனச்சரகர் மணிகண்டன், மருத்துவர்கள் மற்றும் உடுமலை, திருப்பூர் வனக்கோட்டத்தில் உள்ள வன ஊழியர்கள், வனக்காப்பாளர்கள் பலரும் இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர். இந்த முயற்சி வனத்துறை ஊழியர்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை வழங்குவதற்கும் உதவியது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...